வைரமுத்துவுக்கு 3 நிமிடத்தில் கதை சொன்ன மணிரத்னம்

Bookmark and Share

வைரமுத்துவுக்கு 3 நிமிடத்தில் கதை சொன்ன மணிரத்னம்

மணிரத்னம் இயக்கி உள்ள, 'ஓ காதல் கண்மணி' படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளிவருகிறது.

இந்த மாதம் பாடல்கள் வெளிவர இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார். படத்தில் பணியாற்றியது குறித்து வைரமுத்து கூறியதாவது: ஓகே கண்மணி தலைப்பே அழகானது.

மணிரத்னம் என்னிடம் எந்த கதை சொன்னாலும்  அதை 3 நிமிடத்திற்கு மேல் சொல்ல மாட்டார். 3 நிமிடத்திற்குள் விளக்க முடியாத கதை, கதையே அல்ல என்பது அவரது எண்ணம்.

அவரது வசனங்கள் கூர்மையாகவும், நறுக்கு தெரித்தார்போலவும், சுருக்கமாகவும் இருப்பதைப் போலவே அவர் கதை சொல்லும் முறையும் இருக்கும். எது தேவையோ எந்த சொற்கள் மட்டும் தேவையோ அதை மட்டுமே பயன்படுத்துவார்.

சொல்லி முடித்த மூன்று நிமிடத்திற்குள் முழு கதையும் என் மூளைக்குள் வந்து தங்கிவிடும். இரண்டு பாத்திரங்கள் அவர்களுக்குள் ஒரு காதல், ஒரு நிபந்தனை அவர்களின் மனவோட்டம், எண்ணவோட்டம், இவைகளை பற்றிய கோடுகளை மட்டும் வரைந்து காட்டினார்.

சித்திரத்தை நான் வரைந்து கொடுத்துள்ளேன். இது மணிரத்தினத்தின் தனி பாணி. ஓகே கண்மணி அழகான காதல் தளம். மணிரத்னம் ஆடி களிக்கிற பாடல், ஆடி ஜெயிக்கிற பாடல். அந்த களத்தில் மீண்டும் அவர் விருப்பத்தோடு இறங்கி இருக்கிறார். இந்த களத்தில் அவர் வெற்றி பெறுவார். என்கிறார் வைரமுத்து.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions