பி.சுசீலாவை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து வாழ்த்து!

Bookmark and Share

பி.சுசீலாவை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து வாழ்த்து!

அதிகமான பாடல்களை பாடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலாவை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலாவுக்கு புத்தர் சிலை கொடுத்து வாழ்த்து தெரிவித்த வைரமுத்து

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா 1960 முதல் தற்போது வரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் இவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்தது. தனிப்பாடல்களை அதிக அளவில் பாடியவர் என்ற அடிப்படையில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு பி.சுசீலாவை அங்கீகரித்துள்ளது. 

பி.சுசீலா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று பி.சுசீலாவை நேரில் சந்தித்து அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

அத்தோடு அவருக்கு நினைவு பரிசாக புத்தர் சிலையையும் கொடுத்துள்ளார் வைரமுத்து. புத்தர் சிலை என்றால் பி.சுசீலாவுக்கு மிகவும் விருப்பமாம். அதை நினைவில் வைத்து கவிஞர் வைரமுத்து தனக்கு புத்தர் சிலையை நினைவு பரிசாக அளித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக பி.சுசீலா தெரிவித்தார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions