வஜ்ரம் படத்திற்கு யூ சான்றிதழ் பெற மறுபடப்பிடிப்பு

Bookmark and Share

வஜ்ரம் படத்திற்கு யூ சான்றிதழ் பெற மறுபடப்பிடிப்பு

உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் வஜ்ரம். இதில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டியுடன் பவானிசிங் என்ற புதுமுகம் நடித்துள்ளார்.

தம்பி ராமைய்யா அநாதை குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார். பள்ளி உள்ள இடத்தை அபகரிப்பதற்காக ஒரு அரசியல்வாதி பள்ளியை இடித்து தள்ளுகிறார். இதனால் படிப்பை இழந்தை பசங்க எப்படி அரசியல்வாதியிடமிருந்து பள்ளியை மீட்குறாங்க என்பதுதான் கதை.

இந்தப் படம் வருகிற 20ந் தேதி ரிலீசாவதாக இருந்தது. சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இதில் சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுகிற காட்சிகள் நிறைய இருக்கிறது என்று கூறி நிறைய கட்டுகளுடன் ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள்.

இது கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லும் படம் என்று இயக்குனர் வாதாடிப் பார்த்தார். நோக்கம் சரிதான், ஆனால் ஆக்கம் சரியில்லையே என்று தணிக்கை குழுவினர் கைவிரித்து விட்டார்கள்.

இதனால் யூ சான்றிதழ் வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட காட்சிகளை மீண்டும் எடுக்க இருக்கிறார் ரமேஷ் செல்வன். படத்தின் பெரும்பகுதி அசாம் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அதை மேட்ச் பண்ணும் வகையில் அச்சன்கோவில் காடுகளில் படமாக்குகிறார்கள்.


Post your comment





Related News
குழந்தைகள் நல உரிமை ஆணையத்திடம் புகார் : குழந்தை நட்சத்திரங்களுக்கு தடை வருமா?
வஜ்ரம் கொடுத்த அதிர்ச்சி!
ரீ-ஷூட் செய்யப்பட்டு தணிக்கை - வஜ்ரம் படத்திற்கு யு சான்று
மறு தணிக்கை ஆகிறது வஜ்ரம்
தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்
கல்வியின் முக்கித்துவம் வலியுறுத்தும் வஜ்ரம்... அஜித் படத்தோடு மோதுகிறது!
வஜ்ரம் குழு நடத்திய விழிப்புணர்வு மராத்தான்!
வஜ்ரம் படக்குழுவினரின் மாரத்தான் போட்டி
பசங்க’ பட நாயகர்கள் நடிக்கும் வஜ்ரம்... கதைக்களம் ‘கல்வி’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions