வஜ்ரம் கொடுத்த அதிர்ச்சி!

Bookmark and Share

வஜ்ரம் கொடுத்த அதிர்ச்சி!

ஒரு படம் வெற்றி பெற்றால் அதன்பிறகு அதே பாணியில் கதைகள் ரெடி பண்ணுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், விஜய் மில்டன் இயக்கிய கோலிசோடா படம் வெற்றி பெற்றதும், அதையடுத்து அதே பாணியில் சிறுவர்களை வைத்து பல படங்கள் உருவாகின.

ஆனால் அப்படி வெளியான எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக, சமீபத்தில் கோலிசோடாவில் நடித்தவர்கள் நடித்த வஜ்ரம் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த படம் பெரிய அதிர்ச்சியை தோல்வியை கொடுத்து விட்டது. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டத்தை கொடுத்து விட்டது. விளைவு, தனது வீட்டை அடமானம் வைத்து அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு இப்போது அந்த வீடே போய் விட்டதாம்.

விளைவு, இத்தனை நாளும் கோடம்பாக்கத்தில் கோலிசோடா பாணியில் படம் பண்றேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போது இனிமேல் இந்த பாணி வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால் கோலிசோடாவில் நடித்த பசங்களுக்கு கோலிவுட்டில் இருந்து வந்த வரவேற்பும் இனிமேல் இருக்காது என்று தெரிகிறது.


Post your comment





Related News
குழந்தைகள் நல உரிமை ஆணையத்திடம் புகார் : குழந்தை நட்சத்திரங்களுக்கு தடை வருமா?
ரீ-ஷூட் செய்யப்பட்டு தணிக்கை - வஜ்ரம் படத்திற்கு யு சான்று
மறு தணிக்கை ஆகிறது வஜ்ரம்
வஜ்ரம் படத்திற்கு யூ சான்றிதழ் பெற மறுபடப்பிடிப்பு
தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்
கல்வியின் முக்கித்துவம் வலியுறுத்தும் வஜ்ரம்... அஜித் படத்தோடு மோதுகிறது!
வஜ்ரம் குழு நடத்திய விழிப்புணர்வு மராத்தான்!
வஜ்ரம் படக்குழுவினரின் மாரத்தான் போட்டி
பசங்க’ பட நாயகர்கள் நடிக்கும் வஜ்ரம்... கதைக்களம் ‘கல்வி’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions