மறு தணிக்கை ஆகிறது வஜ்ரம்

Bookmark and Share

மறு தணிக்கை ஆகிறது வஜ்ரம்

உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கி உள்ள படம் வஜ்ரம். இதில் பசங்க மற்றும் கோலிசோடா படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகியோருடன் பவானி ரெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இது கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படம். தம்பி ராமையாக ஏழைச் சிறுவர்களுக்காக பள்ளி நடத்துகிறார். ஒரு அரசியல்வாதி பள்ளியின் இடத்தை பட்டாபோட பள்ளியை காலி செய்கிறார்.

இதனால் படிப்பை பாதியில் இழக்கும் மாணவர்கள் ஒன்றாக இணைந்து அரசியல்வாதிக்கு பாடம் புகட்டி பள்ளியை மீட்கிறார்கள் என்பதுதான் படத்தோட கதை.படம் முடிந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்றது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.

அத்தனை வன்முறை காட்சிகள் பரவிக் கிடந்தது. 47 இடத்தில் கத்தரி போட்டும் வன்முறை குறைந்தபாடில்லை. அதனால் ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். கல்வியை பற்றிய படத்துக்கு ஏ சான்றிதழா என்று இயக்குனர் துடித்தார்.

இந்த காட்சிகளுக்கு பதிலாக புதிய காட்சியை எடுத்து சேர்த்து வாருங்கள் யு தருகிறோம் என்று தணிக்கை குழுவினர் ஒரு பட்டியலைக் கொடுத்துவிட்டார்கள். அதன் படி கடந்த சில நாட்களாக இரவும் பகலும் படப்பிடிப்பு நடத்தி புதிய காட்சிகளை இணைத்துள்ளார்கள். படத்தை தணிக்கை குழுவினர் மறுதணிக்கை செய்கிறார்கள்.


Post your comment





Related News
குழந்தைகள் நல உரிமை ஆணையத்திடம் புகார் : குழந்தை நட்சத்திரங்களுக்கு தடை வருமா?
வஜ்ரம் கொடுத்த அதிர்ச்சி!
ரீ-ஷூட் செய்யப்பட்டு தணிக்கை - வஜ்ரம் படத்திற்கு யு சான்று
வஜ்ரம் படத்திற்கு யூ சான்றிதழ் பெற மறுபடப்பிடிப்பு
தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்
கல்வியின் முக்கித்துவம் வலியுறுத்தும் வஜ்ரம்... அஜித் படத்தோடு மோதுகிறது!
வஜ்ரம் குழு நடத்திய விழிப்புணர்வு மராத்தான்!
வஜ்ரம் படக்குழுவினரின் மாரத்தான் போட்டி
பசங்க’ பட நாயகர்கள் நடிக்கும் வஜ்ரம்... கதைக்களம் ‘கல்வி’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions