ரீ-ஷூட் செய்யப்பட்டு தணிக்கை - வஜ்ரம் படத்திற்கு யு சான்று

Bookmark and Share

ரீ-ஷூட் செய்யப்பட்டு தணிக்கை - வஜ்ரம் படத்திற்கு யு சான்று

'பசங்க' படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீராம், கிஷோர், பாண்டி மற்றும் குட்டிமணி ஆகிய நான்கு பேரும், கடந்தாண்டு வெளிவந்த ’கோலி சோடா’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து இந்த நால்வர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் வஜ்ரம். எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கல்வியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே ஷூட்டிங் முடிந்த நிலையில், கடந்தமாதம் தணிக்கைக்கு சென்றது. அப்போது படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ தான் தர முடியும் என்று உறுதியாக கூறிவிட்டனர்.

ஆனால் இயக்குநர் யு சான்று பெற்றே தீர வேண்டும் என்று முடிவெடுத்து, தணிக்கை அதிகாரிகள் கூறிய சில காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ரீ-ஷூட்டிங் நடத்தி புதிய காட்சிகளை இணைந்து, மீண்டும் தணிக்கை அனுப்பினர்.

இதை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்று அளித்துள்ளனர். தங்களது படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறது வஜ்ரம் படக்குழு. வஜ்ரம் படம் பிப்., 27ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
குழந்தைகள் நல உரிமை ஆணையத்திடம் புகார் : குழந்தை நட்சத்திரங்களுக்கு தடை வருமா?
வஜ்ரம் கொடுத்த அதிர்ச்சி!
மறு தணிக்கை ஆகிறது வஜ்ரம்
வஜ்ரம் படத்திற்கு யூ சான்றிதழ் பெற மறுபடப்பிடிப்பு
தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்
கல்வியின் முக்கித்துவம் வலியுறுத்தும் வஜ்ரம்... அஜித் படத்தோடு மோதுகிறது!
வஜ்ரம் குழு நடத்திய விழிப்புணர்வு மராத்தான்!
வஜ்ரம் படக்குழுவினரின் மாரத்தான் போட்டி
பசங்க’ பட நாயகர்கள் நடிக்கும் வஜ்ரம்... கதைக்களம் ‘கல்வி’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions