குழந்தைகள் நல உரிமை ஆணையத்திடம் புகார் : குழந்தை நட்சத்திரங்களுக்கு தடை வருமா?

Bookmark and Share

குழந்தைகள் நல உரிமை ஆணையத்திடம் புகார் : குழந்தை நட்சத்திரங்களுக்கு தடை வருமா?

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி சினிமாவையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் ஹீரோக்கள் பலர் உள்ளனர். சமீபகாலமாக படங்களில் சிறுவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

‘வஜ்ரம்’ படத்தில் நடித்த சிறுவர்கள் கொலை குற்றத்தில் ஈடுபடுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டதால் அப்படம் தணிக்கையில் தாறுமாறாக வெட்டி தள்ளப்பட்டது. மீண்டும் பல காட்சிகள் புதிதாக படமாக்கப்பட்டு இணைத்தபிறகே தணிக்கை சான்றிதழ் கிடைத்தது.

காக்கா முட்டை போன்ற ஒரு சில படங்கள் தேசிய விருதும் பெறுகிறது. சிறுவயதிலேயே நடிக்க வந்துவிடுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கிறது என்று குழந்தை நல சங்கங்கள் பலவற்றின் சார்பில் குழந்தைகள் நல உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணையம் சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

சினிமா உள்ளிட்டவற்றில் குழந்தைகள், சிறுவர்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பொருளாதார மேம்பாடு கிடைத்தாலும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவானவர்களை அவர்களின் இயல்புக்கு மீறி நடிக்க வைப்பதால் அவர்கள் மனநிலை் பாதிக்கலாம்.

இதுகுறித்து கடுமையான விதிமுறைகள் வகுக்க ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாம். 


Post your comment





Related News
வஜ்ரம் கொடுத்த அதிர்ச்சி!
ரீ-ஷூட் செய்யப்பட்டு தணிக்கை - வஜ்ரம் படத்திற்கு யு சான்று
மறு தணிக்கை ஆகிறது வஜ்ரம்
வஜ்ரம் படத்திற்கு யூ சான்றிதழ் பெற மறுபடப்பிடிப்பு
தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்
கல்வியின் முக்கித்துவம் வலியுறுத்தும் வஜ்ரம்... அஜித் படத்தோடு மோதுகிறது!
வஜ்ரம் குழு நடத்திய விழிப்புணர்வு மராத்தான்!
வஜ்ரம் படக்குழுவினரின் மாரத்தான் போட்டி
பசங்க’ பட நாயகர்கள் நடிக்கும் வஜ்ரம்... கதைக்களம் ‘கல்வி’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions