வலியவன் படத்தின் பட்ஜெட் 18 கோடியாம்.?!

Bookmark and Share

வலியவன் படத்தின் பட்ஜெட் 18 கோடியாம்.?!

தலையில் மிளகாய் அரைப்பது என்று சொல்வார்களே... அப்படி ஒரு மிளகாய் அரைத்தல் வேலையைத்தான் சத்தமில்லாமல் பார்த்திருக்கிறார் சரவணன். எந்த சரவணன்? எங்கேயும்.. எப்போதும்..., இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது ஜெய்யை வைத்து வலியவன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

ஏற்கனவே இவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால், இரண்டாவதாக இயக்கிய இவன் வேற மாதிரி படம் மிகப்பெரிய தோல்விப்படம்.

இவன் வேற மாதிரி படம் தோல்வியடைந்த காரணத்தினால் சரவணனின் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், அவருக்கு கை கொடுத்தார் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சம்பத் என்பவர்.

அதாவது சரவணனை வைத்து படம் தயாரிக்க முன் வந்தார். வலியவன் கதையைச் சொன்ன சரவணன் 8 கோடிக்குள் படத்தை முடித்துக்கொடுப்பதாக சொன்னதை நம்பி பணத்தைப் போட்டார் தயாரிப்பாளர்.

படம் வளர ஆரம்பித்ததும் பட்ஜெட்டும் எகிறியது. படம் முடிந்தபோது 18 கோடி செலவாகி இருந்தது. இந்த 18 கோடியில் ஜெய்யுக்கும், சரவணனுக்கும் சம்பளம் சில கோடியாம். வலியவன் படம் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
ஜெய்யின் மார்க்கெட்டை சரித்த வலியவன்!
ஆண்ட்ரியாவை ஏமாற்றிய \'வலியவன்\'
அடுத்த முருகதாஸ் சரவணன் தான் - வலியவன் தயாரிப்பாளர் புகழாரம்!
இறுதிக்கட்ட பணிகளில் வலியவன்
என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா.? ஜெய்க்கு ஒரு குட்டு!
வலியவன் புதிய ஷெட்யூல்ட் - பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்
ஆன்ட்ரியாவின் \'முதல்\' அனுபவம்!
இறுதி கட்ட படப்பிடிப்பில் ஜெய்யின் வலியவன்
ஒரு கோடியில் தயாராகும் வலியவன் கிளைமாக்ஸ்
சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லும் \"வலியவன்\"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions