ஆண்ட்ரியாவை ஏமாற்றிய 'வலியவன்'

Bookmark and Share

ஆண்ட்ரியாவை ஏமாற்றிய 'வலியவன்'

ஆண்ட்ரியா தனி நாயகியாக நடித்த முதல் படமான 'வலியவன்' படம் அவரை நன்றாக ஏமாற்றிவிட்டது. 'எங்கேயும் எப்போதும்' போன்ற படத்தைக் கொடுத்த இயக்குனர் சரவணனை நம்பி அவர் இந்தப் படத்தை நடிக்க சம்மதித்துள்ளார்.

அதோடு, முதன் முறையாக ஒரு படத்தில் தனி நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாலும் 'வலியவன்' படத்தில் நடிக்க சம்மதித்தேன் என படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தெரிவித்திருந்தார்.

ஆனால், படம் வெளிவந்து சில நாட்களிலேயே 'பார்சல்' ஆகிவிட்டது. ஆண்ட்ரியா அறிமுகமான 'பச்சைக் கிளி முத்துச்சரம்' படத்தில் ஜோதிகாவுடனும், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ரீமா சென்னுடனும், 'மங்காத்தா' படத்தில் த்ரிஷா, அஞ்சலியுடனும், 'விஸ்வரூபம்' படத்தில் பூஜா குமாருடனும், 'என்றென்றும் புன்னகை' படத்தில் த்ரிஷாவுடனும், 'அரண்மனை' படத்தில் ஹன்சிகா, லட்சுமிராயுடனும் என 'வலியவன்' படத்திற்கு முன் வரை இரண்டு, மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா ஆவலுடன் எதிர்பார்த்த அவருடைய முதல் தனி கதாநாயகிப் படமான 'வலியவன்' அவருக்கு மறக்க முடியாத வலியைக் கொடுத்து விட்டது.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions