அடுத்த முருகதாஸ் சரவணன் தான் - வலியவன் தயாரிப்பாளர் புகழாரம்!

Bookmark and Share

அடுத்த முருகதாஸ் சரவணன் தான் - வலியவன் தயாரிப்பாளர் புகழாரம்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக இருந்தவர் சரவணன். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சரவணன், வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதால் நடக்கும் விபத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கினார்.

முதல்படத்திலேயே ஒரு வித்தியாசமான கதையை இயக்கி அனைவரையும் வியக்க வைத்தார். தொடர்ந்து, 'இவன் வேற மாதிரி' படத்தை இயக்கிய சரவணன், இப்போது மீண்டும் ஜெய்யை வைத்து வலியவன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஜெய், ஆண்ட்ரியா நடித்துள்ள இப்படம் ரொமான்டிக் - ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.என்.சம்பத், இயக்குநர் சரவணனை புகழ்ந்து கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது,

அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பவர் இயக்குநர் சரவணன், காலை 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் இரவு 9 மணி வரை ஸ்பாட்டிலேயே இருப்பார். சின்ன காட்சியாக இருந்தாலும் கூட, அதை பிரமாண்டமாக காண்பிப்பவர் சரவணன்.

நான் நினைத்ததை சரவணன் கொண்டு வந்துள்ளார். இந்த வலியவன் படம் ரொமான்டிக், ஆக்ஷ்ன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சரவணன் பார்க்கத்தான் அமைதியாக இருப்பார், ஆனால் அவரது படம் அப்படி இருக்காது.

குறிப்பாக இந்த வலியவன் படத்தின் ஆக்ஷ்ன் பிளாக்குகள், ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். அந்தளவுக்கு படத்தின் ஆக்ஷ்ன் காட்சியை சில்வாவும், சிவாவும் அற்புதமாக படமாக்கியுள்ளனர். என்னை பொறுத்தவரை சரவணன் தான் அடுத்த முருகதாஸ் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
இன்று விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions