நகுலின் நாரதன் படமும் ரிலீசுக்கு தயாராகிறது!

Bookmark and Share

நகுலின் நாரதன் படமும் ரிலீசுக்கு தயாராகிறது!

நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் படங்கள் வெளியானபோது நகுல் நடித்த இன்னொரு படமான நாரதனும் ரிலீசுக்கு தயாராகி வந்தது. ஆனால், அடுத்தடுத்து வெளியான அந்த இரண்டு படங்களுமே அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால், நாரதன் படம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகவில்லை. 

அதனால், கடந்த 6 மாதங்களாக அப்படம் கிடப்பில் கிடந்தது. ஆனால், இப்போது நகுல் நடித்துள்ள தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தை உதயநிதி வாங்கி வெளியிடுவதால், அந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதனால், நாரதன் படத்தைப்போலவே வியாபாரமாகாமல் கடந்த சில மாதங்களாக தள்ளாடிக்கொண்டிருந்த அப்படக்குழுவினர் தற்போது நாங்கள் பாஸ் ஆகி விட்டோம் என்று உற்சாக முழக்கமிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நாரதன் படக்குழுவும் உற்சாகமடைந்திருக்கிறது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் வெற்றி பெற்று விட்டால் நாரதன் படத்தை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று வியாபாரம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதேபோல், நகுலை சமீபகாலமாக கண்டுகொள்ளாமல் இருந்த சில டைரக்டர்களும், இந்த படங்கள் வெற்றி பெற்று நகுலின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்தால் அவரை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யலாம் என்று படங்களின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions