வாலு படத்தில் சிம்புவுக்கு டூப்!

Bookmark and Share

வாலு படத்தில் சிம்புவுக்கு டூப்!

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சிம்பு நடித்த வாலு படம் இம்மாதம் 26 அன்று வெளிவரவிருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் சுமார் 15 தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டவகையில் கின்னஸ் சாதனை படைத்து வருகிறது வாலு படம்.

இந்நிலையில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு நிறைய கடன் பிரச்சனை இருப்பதால் அவரிடமிருந்து வாலு படத்தை வாங்கி தானே ரிலீஸ் செய்வதாக சொன்னார் டி.ராஜேந்தர். அவர் வாங்கிய பிறகும் கூட பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் படத்தைத் தியேட்டருக்குக் கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில்தான் ஜூன் 26 அன்று ரிலீஸ் என்றும் இம்முறை மாற்றம் இருக்காது என்றும் டி.ராஜேந்தர் தரப்பில் சொல்லப்பட்டது. தற்போதைய தகவலின்படி ஜூன் 26 அன்று வாலு ரிலீஸ் இல்லை. ஜூலை 3 அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக தற்போது சொல்கிறார்கள்.

இந்நிலையில் வாலு படம் பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. வாலு படப்பிடிப்பின்போது சிம்பு சரியாக ஒத்துழைக்காததினால் பல காட்சிகளில் டூப்பை வைத்து படமாக்கி இருக்கிறார் விஜய் சந்தர்.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் கோவில் படத்தில் நடித்தபோதும், ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கத்தில் சிலம்பாட்டம் படத்தில் நடித்தபோதும் சிம்புவின் ஒத்துழைப்பு திருப்தியாக இல்லாததினால் அவருக்கு பதில் டூப்பை பயன்படுத்தினர். இப்போது மீண்டும் டூப்


Post your comment





Related News
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
கவிப்பேரரசு வைரமுத்துவின் 5 பாடல்களுடன் அவளுக் கென்ன அழகிய முகம்
22 வயது இளைஞர் தயாரிக்கும் படம் காதலும் நகைச்சுவையும் கலந்த \'அவளுக்கென்ன அழகிய முகம்\' .
வாலு - இது நம்ம ஆளு..முதலில் வரும் படம் எது?
வாலு பட பிரச்சனை: \'சிம்புவிற்காக விட்டுக்கொடுத்த ஹன்சிகா\'..!
ஹன்சிகா ‘வாலு’ படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ் படங்களில் நடிக்க தடை..!
சிம்புவின் வாலு படத்தில் அஜித் - விஜய்..!
வாலு படம் மூலம் தனுஷை சீண்டிய சிம்பு.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions