தேசத்துக்காக திருடலாம், பொய் சொல்லலாம்: இயக்குனரின் புது தத்துவம்

Bookmark and Share

தேசத்துக்காக திருடலாம், பொய் சொல்லலாம்: இயக்குனரின் புது தத்துவம்

கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் 'வந்தா மல'. தமிழ், ஹிட்லர், உதயராஜ், பிரசாத் என்கிற 4 புதுமுகங்களுடன் கங்காரு பிரியங்கா நடித்துள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன், நவகுமாரன், கிம் சூன் சங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாரி வெங்கடாச்சலம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் டி.ராஜ் இசை அமைத்துள்ளார்.

படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. படத்தை பற்றி இயக்குனர் இகோர் கூறியதாவது: ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தேசப்பற்று மறைந்திருக்கிறது.

அது சரியான நேரத்தில் வெளிப்படும். ஒரு குப்பத்தில் திருட்டு தொழில் செய்து வாழும் இளைஞர்களுக்குள் இருக்கும் நாட்டுப்பற்று வெளிப்படும் தருணத்தை சொல்லும் படம். ராணுவத்தில் சேர்ந்து எதிரி நாட்டுடன் போரிடுவது மட்டும் நாட்டுப்பற்றல்ல... நாட்டுக்குள்ளிருந்தும் நாட்டை காப்பாற்ற முடியும் என்கிற படம்.

நாட்டுக்கு தேவைன்னா எதுவும் செய்யலாமுன்னு சொல்ற படம். இரண்டு வருடமாச்சு இந்த ஸ்கிரிப்ட் உருவாக்க. அதன் பிறகு நடிகர் நடிகைகளை தேர்வு செய்து அவர்களை குப்பத்தில் வாழவிட்டு பயிற்சி கொடுத்து அதன்பிறகே படப்பிடிப்பு நடத்தினோம். படம் வெளிவந்த பிறகுதான் அதில் எங்களின் உழைப்பு தெரியும். என்கிறார் இகோர்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணையத்தில் வரவேற்பை பெற்ற எம்பிரான் ட்ரைலர்..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலை செய்ய துணிந்த பொன்மகள் வந்தாள் சீரியல் நாயகி - வெடித்த பிரச்சனை
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions