பேசியபடி பணம் தரவில்லை: வனிதா மீது விநியோகஸ்தர் புகார்

Bookmark and Share

பேசியபடி பணம் தரவில்லை: வனிதா மீது விநியோகஸ்தர் புகார்

நடிகை வனிதா, நடன இயக்குனர் ராபர்ட்டுடன் இணைந்து எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை வெளியிட்ட வகையில் விநியோகஸ்தர் வைபிரண்ட் மூவீஸ் ஆர்.வெங்கடேஷ் ராஜா 30 லட்சம் ஏமாற்றிவிட்டார் என்று போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் வைபிரண்ட் மூவீஸ் வெங்கடேஷ் ராஜா, நடிகை வனிதா மீது எதிர் புகார் கூறியுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில்  கூறியிருப்பதாவது:

நான் கடந்த ஒரு வருடமாக வைபிரண்ட் மூவீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். சிறு சிறு படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறேன். நடிகை வனிதா என்னை தொடர்பு கொண்டு தான் தயாரித்த எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தை திரையிட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

பலர் அந்தப் படத்தை வெளியிட மறுத்திருப்பதை அறிந்த நான் படத்தை பார்க்க வேண்டும் என்றேன். அதற்கு நேரமில்லை எப்படியாவது படத்தை வெளியிட உதவி செய்யுங்கள் மொத்த செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.

இது தொடர்பாக முறைப்படி  ஒப்பந்தம் செய்து படத்தை வெளியிட்டேன்.  இதற்காக வனிதா 10 லட்சத்துக்கு காசோலை கொடுத்துவிட்டு மீதியை ரிலீசுக்கு முன்பாக தருகிறேன். என்றார்.

ஆனால் அவர் தரவில்லை ஓரிரு நாளில் எப்படியாவது தந்து விடுகிறேன் என்று சொன்னார். அதை நம்பி 16 லட்சம் செலவு செய்து படத்தை வெளியிட்டேன். எனக்கு தரவேண்டிய மீதி 6 லட்சத்தை தராமல் வேண்டுமென்றே என்மீது அபாண்ட பழி சுமத்தி புகார் கொடுத்துள்ளார்.

அவரிடமிருந்து 6 லட்சம் ரூபாயை பெற்றுத் தரவேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இரு தரப்பு புகார் மனுக்களையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
முன் ஜாமீன் பெறும் முயற்சியில் மோசடி விநியோகஸ்தர்
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்: வனிதா பெருமிதம்
எம்.ஜி.ஆர்., சிவாஜி ரஜினி கமல் படப்பிடிப்பு தீவிரம்
‘எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்’ வைத்து வனிதா விஜயகுமார் தயாரிக்கும் படம்..!
மூன்றாவது திருமணத்துக்குத் தயாராகும் நடிகை வனிதா விஜயகுமார்..!
நடிகை வனிதா இரண்டாவது கணவர் விவகாரத்து சமரசம்'இதே வேலையா போச்சு இவங்களுக்கு'!
2வது கணவருடன் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா
நடிகை வனிதா இரண்டாவது கணவருடனான விவாகரத்து மனு தள்ளி வைப்பு
குடும்ப பிரச்சினையில் இருந்து மீண்டு நடிக்க வருகிறார் வனிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions