முன் ஜாமீன் பெறும் முயற்சியில் மோசடி விநியோகஸ்தர்

Bookmark and Share

முன் ஜாமீன் பெறும் முயற்சியில் மோசடி விநியோகஸ்தர்

திருமணத்தில் புரட்சிகளை செய்த நடிகை வனிதா விஜயகுமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து, வனிதா ஃபிலிம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்த படம் - எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம். டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது.

2 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை 'த வைபிரண்ட் மூவிஸ்' என்ற விநியோக நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார் வனிதா.

அதற்காக 30 லட்சத்தை வாங்கிய 'த வைபிரண்ட் மூவிஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ராஜா, ஒப்பந்தப்படி 80 தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல், 30-க்கும் குறைவான தியேட்டர்களில் மட்டும் படத்தை வெளியிட்டு வனிதாவுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து வெங்கடேஷ்ராஜா மீது 30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தார் வனிதா.

அவரது புகாரின்பேரில் எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க  'த வைபிரண்ட் மூவிஸ்' வெங்கடேஷ் ராஜா தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல் அடிபடுகிறது. அதோடு, தனக்கு முன்ஜாமின் பெறும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்: நடிகர் சங்கம் வாழ்த்து
அஜித்துக்கு புகழாரம் சூட்டிய விஜயகுமார்!
நடிகர் விஜயகுமார் பா.ஜனதாவில் இணைந்தார்
பேசியபடி பணம் தரவில்லை: வனிதா மீது விநியோகஸ்தர் புகார்
தனுஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ருக்மிணி
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்: வனிதா பெருமிதம்
எம்.ஜி.ஆர்., சிவாஜி ரஜினி கமல் படப்பிடிப்பு தீவிரம்
‘எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்’ வைத்து வனிதா விஜயகுமார் தயாரிக்கும் படம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions