'தாரை தப்பட்டை' படத்திற்காக ஒரு மாதம் காலம் கரகாட்ட நடன பயிற்சியை பெற்றேன்!

Bookmark and Share

'தாரை தப்பட்டை' படத்திற்காக ஒரு மாதம் காலம் கரகாட்ட நடன பயிற்சியை பெற்றேன்!

பாலாவின் தாரை தப்பட்டையில் நாயகி வரலட்சுமி என்றதும் பலருக்கும் கொஞ்சம் ஷாக்தான். ஆனால் பாலாவாச்சே... நடிகர்களை சரியாக எடைபோட்டுதானே பாத்திரத்தையே தருவார். அப்படித்தான் வரலட்சுமிக்கும் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

வரலட்சுமிக்கு பாலே உள்ளிட்ட நடனங்கள் அத்துப்படி என்றாலும், நாட்டுப்புற கரகாட்டம் கஷ்டமாகத்தான் இருந்ததாம். ஆனால் ஒரு மாதம் கடும் பயிற்சி எடுத்து அந்த கஷ்டத்தை நிவர்த்தி செய்து கொண்டாராம். 

பாலா படம், இளையராஜாவின் 1000வது படம் என்ற பெருமைகளுக்குரிய இந்தப் படத்தில் நடித்தது குறித்து என்ன சொல்கிறார் வரலட்சுமி? "பாலா சார் ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள் பலரும். அது உண்மைதான். 

அவர் படம் ஒன்றில் நடித்துவிட்டால், இந்த தமிழ் சினிமாவில் வேறு எந்த இயக்குநர் படத்திலும் எளிதாக நடித்துவிட முடியும் என்பேன். இந்த படம் நடனம் சம்பந்தப்பட்டது.

ஏற்கனவே நான் நடனம் பயின்று இருந்தாலும் 'தாரை தப்பட்டை' படத்தில் வரும் நடனம் தொடர்பாக ஒருமாத காலம் நடன பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் 'தாரை தப்பட்டை' படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது," என்றார்.


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions