வரலட்சுமிக்கு தாரைத்தப்பட்டை கொடுத்த நம்பிக்கை!

Bookmark and Share

வரலட்சுமிக்கு தாரைத்தப்பட்டை கொடுத்த நம்பிக்கை!

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, மேற்கத்திய நடனங்களை நன்கு அறிந்தவர். முக்கியமாக பாலே நடனம் அவருக்கு அத்துபடியாம். அவரது நடன திறமைக்காகத்தான் சிம்புவின் போடா போடி படத்தில் அவர் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

அதோடு, அந்த முதல் படத்திலேயே கவர்ச்சி காட்சிகளிலும் துணிச்சலாக நடித்த வரலட்சுமி அதற்கடுத்து விஷாலுடன் நடித்த மதகஜராஜா தனக்கு கமர்சியல் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் அந்த படம் கிடப்பிலேயே கிடக்கிறது. இந்த நிலையில், தற்போது தாரைதப்பட்டை படத்திலும் அவருக்கு நடனம் தெரியும் என்பதாலேயே புக் பண்ணிய பாலா, கரகாட்ட பயிற்சியையும் கொடுத்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்.

மேலும், எந்த வகை நடனமாக இருந்தாலும் அதை உள்வாங்கிக்கொண்டு தனது பாணியில் வித்தியாசப்படுத்தி ஆடிக்காட்டக்கூடிய திறமை பெற்ற வரலட்சுமி, கரகாட்டத்தை பரம்பரையாக கரகாட்டமாடுபவர்களையே மிஞ்சும் வகையிலும் சில வித்தியாசமான அசைவுகளை தனது பாணியில் கொடுத்து வருகிறாராம்.

அதைபப்பார்த்து, பாலா, சசிகுமார் உள்பட அனைவரும் அசந்து போயிருக்கிறார்களாம். அதனால், நடனத்தில் தான் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தபோதும, அது இன்னமும் ரசிகர்களை சரியாக சென்றடையவில்லையே என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த வரலட்சுமி, இந்த தாரை தப்பட்டை படம் தனது நடன திறமையை முழுசாக வெளிக்கொண்டு வந்து தன்னை ரசிகர்களிடமும் முழுசாக கொண்டு சேர்த்து விடும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறி வருகிறார். 


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions