
நடிகை வரலட்சுமியை பலருக்கும் தெரிந்திருக்கும். இவர் முக்கியமாக பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் பட்டையை கிளப்பும்விதமாக நடித்து பலரிடமும் பாராட்டுக்களை பெற்றார்.
இப்போது அவர் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொந்தரவு செய்தி கேட்டு தனக்கு நடந்த விஷயங்கள் குறித்து கடிதம் மூலமாக தகவல் வெளியிட்டிருக்கிறார்.
இதில் அவர் இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை பார்த்தேன். நானும் இந்த தொல்லைகளை சந்தித்திருக்கிறேன். ஒருமுறை நான் முன்னணி டி.வி. சேனல் அதிகாரியுடன் மீட்டிங்கில் இருந்தேன்.
முடியும் தருவாயில் அவர் என்னிடம் எப்போது வெளியே சந்திக்கலாம் என கேட்டார். நான் அவரின் ஏதும் வேலை இருக்கிறதா என கேட்டேன்.
அவர் ’இல்லை... இல்லை வேலையெல்லாம் இல்லை. மற்ற விசயங்களுக்காக’ என சூசகமாய் சொன்னார். கோபமான நான் அவரின் தயவு செய்து போயிடுங்க என்றேன். அவரும் போய்விட்டார். இதுபோல பல பெண்களுக்கு நடக்கிறது. நடிகை என்பதை தாண்டி ஒரு சக பெண்ணாக பேசுகிறேன்.
எல்லோரும் தங்களுக்கு நடக்கும் இது போன்ற இன்னல்களை கண்டு வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். நீங்கள் யாரும் பயபடக்கூடாது.
தைரியமாக இருக்கவேண்டும். பெண்களை தரக்குறைவாகவோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தவிர்க்கப்படவேண்டும் என கூறினார்.
Post your comment