உதவிக்கரம் செய்யும் பசங்கதான் நிஜ ஹீரோஸ்" - வரலட்சுமி நெகிழ்ச்சி

Bookmark and Share

உதவிக்கரம் செய்யும் பசங்கதான் நிஜ ஹீரோஸ்

லிஸ்ட்டுடன் "நாங்க ஸ்டார்களே கிடையாது, உண்மைய சொன்னா இந்த வாலண்டியர் பசங்க தான்.

அவ்ளோ செய்யறாங்க. இவங்க இல்லன்னா ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது. இன்னும் மக்கள் கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுக்கணும்.

கொண்டு வர பொருட்கள் தான் மட்டுமே வாங்கிக்காம எல்லாருக்கும் சேர விடணும். பசங்க அடியெல்லாம் வாங்கிட்டு வராங்க. உள்ள ஏரியாக்குள்ள போக விடாம முன்னாடியே வாங்க முயற்சி பண்றாங்க. அதெல்லாம் தவிர்க்கணும். அப்பறம் இந்த தண்ணி பாட்டில்கள் எங்க கிட்ட நிறைய இருக்கு.

ஆனா இந்த போர்வை, பிஸ்கட்ஸ், மொஸ்கிட்டோ காயில் இதெல்லாம் தான் இன்னும் அதிகமா தேவைப்படுது. நான் உள்ளயே போகலைங்க. இந்த பில்டிங் குள்ள தான் என்னோட வேலை. ரியல் ஹீரோக்கள் இவங்க தான்" என அங்கே பிசியாக வேலை செய்த பசங்களைக் கை காட்ட உற்சாகமாக ஹாய் சொன்னார்கள் நண்டு ஜெகனும் சில வாலண்டியர்களும் பேசுகையில் "எங்க கூட எல்லா ஆக்டர்ஸும் ஃப்ரண்ட்ஸ் மாதிரி பேசுறாங்க.எல்லாரும் எங்கள நல்லா பாத்துக்கறாங்க" என மீண்டும் பேக்கிங் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். 

’போடா போடி’ மோஜோ: "ரொம்ப புது அனுபவம். வரலட்சுமி தான் என்ன கூப்டாங்க. இதுக்கு அப்பறம் நிறைய புது புது ஃப்ரண்ட்ஸ்லாம் கிடைச்சுருக்காங்க. எங்க ஏரியாவுல கூட இப்பதான் பக்கத்து வீட்டுக் காரங்கள்லாம் யாருன்னு தெரிய ஆரம்பிச்சுருக்கு. ஒரு பக்கம் சென்னையோட இன்னொரு நல்ல முகமும் , உறவும் தெரிய ஆரம்பிச்சுருக்கு. நிறைய பொருட்கள ஏத்தணும்" என பாட்டுப்பாடிக்கொண்டே அவர் பாணியில் பிசியானார்.

அனைவரும் ஒரு சேர கேட்டுக்கொண்டது.. தயவு செய்து உங்கள் தேவைகள் எதுவாயினும் எங்களுக்கு முக நூல், சமூக வலைகள் மூலம் தெரியப்படுத்துங்கள் எங்களை தொடர்புகொள்ள 9841632251 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம். அதே போல் இப்போது கொடுத்து வரும் பொருட்களால் நிறைய பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்துள்ளன.

அதக் க்ளீன் பண்ணாதான் எதிர்காலத்துல நோயில்லாம எல்லாரும் தப்பிக்க முடியும் எனக் கேட்டுக்கொண்டனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions