எல்லாரும் வாங்க! 5 நிமிஷம் தான். வரலட்சுமி அழைப்பு

Bookmark and Share

எல்லாரும் வாங்க! 5 நிமிஷம் தான். வரலட்சுமி அழைப்பு

நடிகை வரலட்சுமி சமீபத்தில் தானும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக மனம் திறந்து கூறியிருந்தார். பெண்கள் தனக்கு நடக்கும் இது போன்ற பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக தைரியமாக பேச வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

மேலும் நடிகர் பாவனாவுக்கு நடந்த விசயம் குறித்தும் தனது கருத்துகளை பதிவிட்ட அவர் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நாம் எல்லோரும் ஒன்று கூட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

மகளிர் தினமான இன்று அவர் save shakthi என்னும் கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

இதில் நடிகை சினேகா, இயக்குனர் வெங்கட் பிரபு, கயல் சந்திரன், VJ அஞ்சனா மற்றும் பலர் கலந்துகொண்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த புரட்சிக்கும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் வரவேண்டும். 5 நிமிடங்கள் ஒதுக்கி உங்களுடைய கையெழுத்தை பதிவு செய்யவும் என கூறியுள்ளார்.

சினேகா பேசிய போது வரலட்சுமியை ஒரு நடிகையாக பார்க்காதீர்கள், ஒரு பெண்ணாக மற்ற பெண்களுக்காக உதவும் பெண்ணாக அவர் இந்த முயற்சியை எடுத்துள்ளார். குற்றங்கள் தவிர்க்கப்படவேண்டும், தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும் என அவர் கூறியிருந்தார்.

 

 

 


Post your comment

Related News
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்: விஜய் சேதுபதி, வரலட்சுமி தேர்வு
பெண்கள் பாதுக்காப்புக்காக அதிரடி யோசனை கூறிய நடிகை வரலட்சுமி
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
மார்ச் 8ம் தேதி பாருங்கள், அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வரலட்சுமி
வரலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடியாக டுவிட் செய்த சரத்குமார்
இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions