தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்

Bookmark and Share

தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்

திரைப்படத் தயாரிப்பாளரும், சமீபத்தில் நடிகையுடனான திருமண நிச்சயத்தை முறித்துக் கொண்டவருமான மணியான தயாரிப்பாளருக்கும், சமீபத்தில் உலக நாயகனை வைத்து படம் தயாரித்த இயக்குனர், தயாரிப்பாளருக்கும் நேற்று டிவிட்டரில் நடந்த கருத்துப் பரிமாற்றம் டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறதுது.

இரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர், இயக்குனர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் அலங்காரப் பொருள் ஒன்றில் பெயர் கொண்ட படம் ஒன்றை வாங்கி வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே மணியான தயாரிப்பாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அந்த இயக்குனர், தயாரிப்பாளரைப் பற்றி கிண்டலடித்திருக்கிறார்.

சமீபத்தில் உலக நாயகனை வைத்து எடுத்த படத்தை வெளியிட முடியாமல் ரிலீசுக்கு முந்தைய நாள் பலரிடமும் பைனான்ஸ் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர், இயக்குனர். அப்படி பணமே இல்லாத நிலையில் இப்போது புதுப் படம் ஒன்றை வாங்கியிருப்பதுதான் மணியான தயாரிப்பாளரை கிண்டலடிக்க வைத்திருக்கிறதாம்.

அப்படியென்றால் மணியான தயாரிப்பாளருக்கும், தயாரிப்பாளர், இயக்குனருக்கும் இடையே தொழில் முறையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்கிறார்கள்.

மணியான தயாரிப்பாளர் மஞ்சப் பையுடன் வந்த அந்த இயக்குனர் மஞ்சப் பையுடனே திரும்பப் போவார் போலிருக்கிறதே என்பது கிண்டலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. தன் திருமண விவகாரத்தை மீடியாக்கள் அவ்வளவு எழுதியும் கூட அதைப் பற்றி வாயைத் திறக்காதவர் தற்போது இந்த விவகாரத்தில் மட்டும் உடனே வாயைத் திறந்திருப்பது ஏன் ? என்கிறார்கள்.

 


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions