காக்கா முட்டை ஒரு தேவதூதன் - வசந்தபாலன்

Bookmark and Share

காக்கா முட்டை  ஒரு தேவதூதன் - வசந்தபாலன்

காக்கா முட்டை  படத்தின் வெற்றி திரையுலகினரை நிறையவே உற்சாகமடைய வைத்திருக்கிறது. தேசிய விருது பெற்ற படங்களும், விருதுகளைப் பெற்ற படங்களும் வியாபார ரீதியாக வெளியாவதே பிரச்சனை என்ற நிலை மாறி,  காக்கா முட்டை  படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

தமிழ்த் திரையுலகத்தில் சிறந்த படங்களை எடுத்து, அவற்றை வெளியிட முடியாமல் தவிக்கும் இயக்குனர்களுக்கும், நல்ல படத்தைக் கொடுத்தும் ரசிகர்களின் அங்கீகாரத்தை சரியாகப் பெற முடியாத இயக்குனர்களுக்கும் இந்தப் படத்தின் வெற்றி உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்  உள்ளிட்ட வழக்கமான படங்கள் அல்லாத வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் வசந்தபாலன் காக்கா முட்டை படத்தின் வெற்றி என் போன்ற யதார்த்த வகை இயக்குனர்களுக்கு தேவதூதன் ஆக இருக்கிறது எனப் பாராட்டியிருக்கிறார்.

காக்கா முட்டை  படத்தின் வியாபார வெற்றி அளவில்லாத உற்சாகத்தை அளிக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் நிலை வேறு விதமாகவும், பயமுறுத்தும் வகையிலும், பிடிபடாத வகையிலும் இருந்தது.

திகில் படங்கள், பயமுறுத்தும் பேய் படங்கள், பயமுறுத்தி சிரிப்பூட்டும் பேய் படங்கள், வெறும் சிரிப்பு படங்கள், திரில்லர் படங்கள், திடுக்கிடும் திருப்பங்களும்  கொண்டை ஊசி வளைவுகளும் நிரம்பிய சண்டை படங்கள், மட்டுமே ஓடிக் கொண்டிருந்த நிலையில்,  பார்வையாளர்கள் மொத்த பேருமே இதற்கு மாறிவிட்டார்களோ என்று தோன்றியது.

இளம் பார்வையாளர்கள் மொத்த பேரும் இந்த மனநிலையில் தான் திரைப்படங்களை ரசிக்கிறார்களோ என்ற ஐயம் உண்டாகியது. இது ஐ போன் யுகம், ஐ பேடு யுகம், பேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப் யுகம்,  ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று நிலவிய பேச்சை பொய்யாக்கியது காக்கா முட்டையின் வெற்றி.

யதார்த்த வகை படங்களுக்கான காலம் முடிந்து விட்டதோ என்று எண்ணுகிற நிலையில் காக்கா முட்டை திரைப்படம் ஒரு தேவதூதன்,  என் போன்ற யதார்த்த வகை இயக்குனர்களுக்கு,” என்று பாராட்டியுள்ளார் வசந்தபாலன்.


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions