மீண்டும் சர்ச்சையில் 'வசந்தகுமாரன்'

Bookmark and Share

மீண்டும் சர்ச்சையில் 'வசந்தகுமாரன்'

விஜய் சேதுபதி நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கும் போது அவருடைய படங்களை சில ஏரியாக்களில் வாங்கி வெளியட்ட ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் சுரேஷுக்கும், விஜய் சேதுபதிக்கும் 'வசந்தகுமாரன்' படத்தயாரிப்பு சம்பந்தமாக பெரிய பிரச்சனை உருவானது.

அந்தப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி விருப்பம் காட்டவில்லை என்று கூறப்பட்ட நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுரேஷ், அது சம்பந்தமான ஒப்பந்தங்களைக் காட்டி விளக்கமளித்தார்.

விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமீபத்தில்  இப்படம் மீண்டும் ஆரம்பமாகப் போவதாக ஒரு பேச்சு எழுந்தது. அதை அப்படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ 9 சுரேஷ் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை விஜய்சேதுபதி தரப்பிலிருந்து மறுப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் சேதுபதியின் அடுத்த வெளியீடாக "இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்” ஆகிய படங்கள்தான் வெளிவரும் என்றும் தெரிவித்தார்கள்.

இந்த வரிசையில் நீண்ட நாட்களாகப் படமாகி வரும் 'மெல்லிசை' யும் இருக்கும் என்கிறார்கள். நயன்தாராவுடன், 'நானும் ரௌடிதான்' படத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள 'இறைவி' படத்திலும் நடிக்க உள்ளார். அதே சமயம், 'வசந்தகுமாரன்' படம் பற்றிய தனது இறுதி முடிவை விஜய் சேதுபதி விரைவிலேயே அறிவிப்பார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கிறார்கள். 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்
அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா
தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்
ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி
அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions