மீண்டும் வசந்தகுமாரன்!

Bookmark and Share

மீண்டும் வசந்தகுமாரன்!

தற்போது அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. புறம்போக்கு, இடம்பொருள் ஏவல் படங்களில் நடித்து முடித்துவிட்டார். ஆனாலும் அவர் நடித்த படங்கள் வெளிவருவதில் சுணக்கம் தெரிகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வன்மம் படம் தோல்வியடைந்தததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே ட்ராப் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வசந்தகுமாரன் படத்தில் மீண்டும் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது. ஸ்டுடியோ 9 என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருந்த படம் - வசந்தகுமாரன்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் தன்னை மிரட்டியதால் வசந்தகுமாரன் படத்திலிருந்து தான் விலகிக் கொள்வதாக தெரிவித்தார் விஜய் சேதுபதி. தயாரிப்பு நிறுவனத்திற்கும், தனக்கும் இடையே இருந்த சில கருத்த வேறுபாடுகள் காரணமாகவே இந்த முடிவை, தான் எடுத்ததாக அப்போது சொன்னார் விஜய்சேதுபதி.

ஸ்டியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளர், விஜய் சேதுபதியால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் கம்பெனியை மூட இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில்தான் தற்போது கதையிலும், விஜய்சேதுபதியின் கேரக்டரிலும் சிறு சிறு மாற்றங்கள் செய்து மீண்டும் வசந்தகுமாரன் படத்தைத் துவங்கலாம் என விஜய்சேதுபதியும், தயாரிப்பாளரும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பைத் துவங்கவிருப்பதாகவும் செய்திகள் கிடைத்திருக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions