இயக்குனர் வாசு பாஸ்கருக்கு விரைவில் திருமணம்

Bookmark and Share

இயக்குனர் வாசு பாஸ்கருக்கு விரைவில் திருமணம்

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மறுபடியும் ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் வாசு பாஸ்கர். இவருக்கும் கவிதா என்பவருக்கும் திருமணம் செய்ய இருவரின் பெற்றோர்களும் முடிவு செய்துள்ளனர். இவர்களின் நிச்சயதார்த்தம் வருகிற மார்ச் 30-ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவிருக்கின்றனர். இவர்களது திருமண தேதி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. வாசு பாஸ்கர் இயக்கிய ‘மறுபடியும் ஒரு காதல்’ படம்தான் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்த கடைசி படம்.

இப்படத்தை தொடர்ந்து அரசியலில் நுழைந்த வடிவேலுவுக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து ‘தெனாலி ராமன்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். வாசு பாஸ்கர் அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த வேதா என்ற படத்தை தயாரித்தும் உள்ளார். 


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
எப்படி இருந்த தல பட நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே' - வாசுதேவ் பாஸ்கர்
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions