அக்டோபர் 8ஆம் தேதி ‘வேதாளம்’ டீஸர்!

Bookmark and Share

அக்டோபர் 8ஆம் தேதி ‘வேதாளம்’ டீஸர்!

சினிமாத்துறையின் முக்கிய நிகழ்வுகளை சம்மந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ட்விட்டரில் உள்ள சிலர் யூகங்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.

தன்னுடைய ட்விட்டர் கணக்கை ஃபாலோ பண்ணுகிறவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்காகவே இப்படிப்பட்ட குறுக்குவழியைக் கையாள்கின்றனர். இது புரியாமல் அப்படிப்பட்டவர்கள் வெளியிடும் தகவல்களை மற்றவர்கள் நம்பிவிடுகின்றனர்.

இதனால் திரையுலகில் நிறைய குழப்பங்கள். உதாரணத்துக்கு, விஜய்யின் ‘புலி’ படம் வெளியான அதே அக்டோபர் 1ஆம் தேதியன்று அஜித் நடித்த ‘வேதாளம்’ பட டீஸர் வெளிவருவதாக தகவலை பரப்பினார்கள்.

போதாக்குறைக்கு பாடலாசிரியர் மதன் கார்க்கியும்… ‘டீஸரைப் பார்த்து வியந்து போனேன். இன்று இரவு வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’ என ட்வீட்டினார். இந்த தகவலின் காரணமாக வேதாளம் டீஸர் குறித்து அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிலிருந்தனர். ட்விட்டரில் வேதாளம் டிரென்டிங்கானது. கடைசியில் வேதாளம் டீஸர் வெளியாகவே இல்லை.

இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி ‘வேதாளம்’ டீஸர் கண்டிப்பாக வெளியாகும் என மீண்டும் ட்விட்டரில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. வேதாளம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு வியாழக்கிழமை உகந்த நாள் என்பதால் இந்த தகவலை அஜித் ரசிகர்கள் மீண்டும் நம் ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

வேதாளம் படக்குழுவினரிடம் இதுபற்றி விசாரித்தால், அப்படி ஒரு ஐடியாவே எங்களுக்கு இல்லையே? என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் மறுபடியும் அஜித் ரசிகர்களுக்கு அல்வாதானா?


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions