தமிழக மொத்த வசூல் சாதனையை முறியடித்ததால் மகிழ்ச்சியில் வேதாளம் விநியோகஸ்தர்கள்

Bookmark and Share

தமிழக மொத்த வசூல் சாதனையை முறியடித்ததால் மகிழ்ச்சியில் வேதாளம் விநியோகஸ்தர்கள்

தீபாவளி அன்று, சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் வேதாளம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையை 'வேதாளம்' நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

இப்படம் குறைந்த விலையில் விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பதும், 'யு' சான்றிதழ் இருப்பதால் வரிச்சலுகை பெற்றிருப்பதும் 'வேதாளம்' படத்துக்குக் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

இப்படம், முதல் நாள் 15.3 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும் வசூல் பெரியளவில் குறையவில்லை என பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்தை வாங்கிய பல விநியோகஸ்தர்கள் தற்போதே லாபம் அடைந்திருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் வசூல் நன்றாக இருப்பதால், இன்னும் இரண்டு வாரங்களில் கண்டிப்பாக 'எந்திரன்' படத்தின் தமிழக மொத்த வசூல் சாதனையை முறியடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions