வசூலில் ஜேம்ஸ்பாண்ட், கமல் படங்களை முந்திய வேதாளம்!

Bookmark and Share

வசூலில் ஜேம்ஸ்பாண்ட், கமல் படங்களை முந்திய வேதாளம்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10 ஆம் தேதி வேதாளம் வெளியானது.

தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையை 'வேதாளம்' நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்களே தெரிவித்துள்ளனர்.

சென்னையில்  2-வது வார வசூலில்  ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் படத்தையும், கமலின் தூங்காவனம் படத்தையும் வசூலில் முந்தி உள்ளது.

வேதாளம் 2-வது வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் 237 காட்சிகள் ஓடி ரூ.1.03 கோடி வசூல் ஈட்டி வசூலில் முதல் இடத்தில் உள்ளது.  முதல் வார இறுதியில் ரூ 3.23 கோடி வசூல் செய்து இருந்தது. சென்னையில் பெய்த பலத்த மழையிலும் மொத்தம் 13 நாட்களில் ரூ.5.15  கோடி வசூல் செய்து உள்ளது. 

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர்  சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது. அது 150 காட்சிகள் ஓடி ரூ.39.23 லட்சம் வசூல் செய்து உள்ளது.

கமல்ஹாசனின் தூங்காவனம்  3-வது இட்த்தில் உள்ளது மொத்தம் 147 காட்சிகள் ஓடி ரூ.32.52 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம் முதல் வார இறுதியில் மொத்தம் ரூ.1.69 கோடி ஈட்டி உள்ளது. படம் நகர்புற மக்களை கவர்ந்து உள்ளது அதனால் சென்னையில் தொடர்ந்து நன்றாக ஓடி வருகிறது.

சல்மான் கானின்  "பிரேம் ரதன் தா பயோ"  4-வது இடத்தில் உள்ளது 54 காட்சிகள் ஓடி ரூ.14.73 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம்  முதல் வார இறுதியில் ரூ.42.93 லட்சம் வசூலித்து உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் வரை ரூ.79.98 லடசம் வசூல் செய்து உள்ளது.புதிய வரவான ஒரு நாள் இரவில்  69 காட்சிகள் ஓடி ரூ.9.62 லட்சம் வசூல் செய்து உள்ளது. 

இரண்டாவது வார முடிவில் வேதாளம் திரைப்படம் மொத்தமாக  117 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions