வேதாளம் பேனரை கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்- கேரளாவில் பரபரப்பு

Bookmark and Share

வேதாளம் பேனரை கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்- கேரளாவில் பரபரப்பு

தீபாவளியன்று கமலின் தூங்காவனம், அஜித்தின் வேதாளம் என இரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கிறது.

4-காவது முறையாக மீண்டும் அஜித்-கமல் படங்கள் மோதவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவ்விரு படங்களின் டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் இது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படங்கள் வெளியாகவிருக்கும் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் பேனர்கள் வைத்து விட்டதால் கமல் ரசிகர்கள் பேனர் கட்டுவதற்கு இடமில்லையாம். பொதுவாக கேரளாவில் கமலின் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும். அதனால் கமலுக்கு அங்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

தற்போது கேரளாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் கமல் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. தூங்காவனம் பேனர்கள் வைக்க இடமில்லாததால் வேதாளம் படத்தின் பேனர்களை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்கள், ரசிகர்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions