அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!

Bookmark and Share

அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது. இன்றுடன் (நவம்பர் 10) இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.

இதை முன்னிட்டு இன்று சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், கண்ணியாகுமரி, திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் வேதாளம் ரீ ரிலிஸ் ஆகியுள்ளது. நேற்றே சென்னை வெற்றி திரையரங்கில் ஒரு ஷோ போடப்பட்டது. இதை அஜித் ரசிகர்கள் முதல்நாள் முதல் ஷோ போல கொண்டாடியுள்ளனர்.

வேதாளம் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி ‘தல 57’ படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?
வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!
தல தீபாவளியில் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடும் வேதாளம்!
வெளிநாட்டில் 80 திரையரங்கில் வெளியாகும் வேதாளம்...!
வேதாளத்தை ஒட்டுமொத்தமாக வாங்கிய பிரபல நிறுவனம்?
தெறி லோக்கலாக இறங்கி அடித்திருக்கும் அஜீத்..! வேதாளம் படத்தின் சுவாரசியங்கள்
வேதாளம் சென்ஸாருக்கே செல்லவில்லை, அதற்குள்ளயேவா? வாயை பிளக்கும் கோலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions