வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?

Bookmark and Share

வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?

வேதாளம் படத்தின் வசூல் விவரங்களைக் கேட்டவர்கள் இவ்வளவு பெரிய தொகை சாத்தியமில்லையே என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஒரேநாளில் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் 15 கோடியை வேதாளம் படம் வசூல் செய்திருப்பதை குறித்தே இந்த சந்தேகம் எழுந்தது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடம் கேட்டால் 15 கோடி வசூல் சாத்தியமானது எப்படி என்று விளக்குகின்றனர்.

தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள தியேட்டர்களில் அதிகாலை 1.30 மணியிலிருந்தே வேதாளம் படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டனவாம். வேதாளம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியது பெரிய இடத்து சமமந்தப்பட்ட நிறுவனம் என்பதால் எவ்வித இடையூறும் இல்லாமல் பல ஊர்களில் 7 காட்சிகள் கூட திரையிடப்பட்டதாக தகவல்.

அது மட்டுமல்ல டிக்கெட் கட்டணமும் 500ஐ தொட்டிருக்கிறது. அதன் காரணமாகவே ஒரே நாளில் 15 கோடி வசூல் சாத்தியமானதாக சொல்கின்றனர். இந்திய அளவில் 3 நாட்களில் வேதாளம் படம் சுமார் 43 கோடியை தொட்டிருக்கிறது.

முதல்நாள் வசூல்:

தமிழ்நாடு - 15.5 கோடிகேரளா - 2.10 கோடிகர்நாடகா - 2 கோடிமற்ற மாநிலங்கள் - 1.10 கோடி
மொத்தம் (இந்திய அளவில்) - 20.25 கோடி

2ம் நாள் வசூல்:

தமிழ்நாடு - 9 கோடிகேரளா - 1.70 கோடிகர்நாடகா - 1.45 கோடிமற்ற மாநிலங்கள் - 90 லட்சம்
மொத்தம் (இந்திய அளவில்) - 13.05 கோடி

3ம் நாள் வசூல்:

தமிழ்நாடு - 7 கோடி,கேரளா - 1கோடி,கர்நாடகா - 85 கோடி மற்ற மாநிலங்கள் - 50 லட்சம்
மொத்தம் (இந்திய அளவில்) - 9.35 கோடி

இந்திய அளவில் அடுத்த 2 நாட்களில் வேதாளம் படம் சுமார் 20 கோடிகளை வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கின்றனர் விநியோகஸ்தர்கள்.


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions