வேதாளம் சென்ஸாருக்கே செல்லவில்லை, அதற்குள்ளயேவா? வாயை பிளக்கும் கோலிவுட்

Bookmark and Share

வேதாளம் சென்ஸாருக்கே செல்லவில்லை, அதற்குள்ளயேவா? வாயை பிளக்கும் கோலிவுட்

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்து வரும் வேதாளம் படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகி உலக அளவில் சாதனை புரிந்துள்ளது. அதனால் டீசரை தமிழகத்திலுள்ள முக்கிய தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

முதல்கட்டமாக இன்று முதல் கோவையில் உள்ள சில தியேட்டர்களில் வேதாளம் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களாக வேதாளம் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, “ஆலுமா டோலுமா” பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டது. பெருவாரியான ரசிகர்கள் இந்த பாடலை முணுமுணுக்கத் தொடங்கி விட்டதோடு, அந்த பாடலை கம்போஸ் செய்த அனிருத்துக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகயிருக்கும் நிலையில், படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிந்து விட்டதால் ஓரிரு தினங்களில் வேதாளம் சென்சாருக்கு செல்லும் என்று தெரிகிறது.

வேதாளம் படத்தின் டிக்கெட் ரிசர்வேசன் இன்னும் தமிழகத்திலேயே தொடங்கப்படாத நிலையில், இலங்கையில் ஒரு தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து விட்டதாம்.

ஒரு டிக்கெட்டின் விலை 450 ரூபாய் என்று அங்குள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் பதிவு செய்வதற்கான விவரங்களையும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்களாம். இது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions