வேதாளம் அள்ளிய வசூலை பிரிப்பதில் சிக்கல்!

Bookmark and Share

வேதாளம் அள்ளிய வசூலை பிரிப்பதில் சிக்கல்!

'வேதாளம்' படத்துக்கு வசூல் நன்றாக இருந்தாலும், இதுவரை அப்படத்தின் வசூலை யாருமே பிரிக்கவில்லை. பிரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் 'வேதாளம்'. ஏ.எம்.ரத்னம் தயாரித்த இப்படத்தை ஜாஸ் சினிமாஸ் வெளியிட்டது. இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.

ஆனால், வந்திருக்கும் 'வேதாளம்' வசூலை பிரிப்பதில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது படக்குழு. அதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தான் காரணம்.

முன்னதாக, 'கயல்' படத்துக்காக வரிச் சலுகைக் கட்டணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவேன், " கேளிக்கை வரிச் சலுகையின் பயன்கள், திரைப்படத் தொழிலுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் போய்ச் சேர வேண்டும் என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. அதனால், மனுதாரரிடம் கூடுதலாக வசூலித்த கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணத்தை (ரூ.107) திருப்பித் தர வேண்டும். மனுதாரரைப் போல மற்றவர்களிடமும் வசூலித்த பணத்தைத் திருப்பித் தர இயலாது.

எனவே, மற்றவர்களிடம் வசூலித்த கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணத்தை வணிக வரி மற்றும் பதிவுத் துறை, வணிக வரித் துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் செலுத்த வேண்டும். கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணம் திரைப்படம் காண வரும் பார்வையாளர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

எனவே, கேளிக்கை வரிச் சலுகை படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு போய்ச் சேருவதை உறுதி செய்யும் வகையில் இந்த உத்தரவு கிடைத்த 4 வாரத்துக்குள் உரிய உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணத்தை பார்வையாளர்களிடம் வசூலித்த சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மற்றும் வரிச் சலுகைக் கட்டணத்தை வசூலிக்கும் அனைத்து திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு திரையரங்க உரிமையாளர் ரூ.107 திருப்பித் தர வேண்டும்" என்று உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரினார்கள். ஆனால், இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். மேலும், இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தமிழக அரசு உள்ளிட்ட அனைவருமே ஆஜாராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கால் தான் 'வேதாளம்' படத்தின் வசூலை பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. வசூலை பிரித்துவிடும் சமயத்தில், கேளிக்கை வரி மக்களுக்குப் போய் சேர வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் மறுபடியும் வசூல் செய்ய வேண்டும். அது முடியாத ஒன்று என்பதால் வசூலைப் பிரிக்காமலேயே வைத்திருக்கிறார்கள்.

இந்த வழக்கு முடியும் வரை, எவ்வளவு வசூல் வந்தாலும் பிரிக்காமல் மட்டுமே வைத்திருக்க முடியும். மேலும், வசூலை பிரித்தால் மட்டுமே விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தெரியவரும்.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன..?
8 நாளில் 100 கோடி வசூல் அடித்த வேதாளம்!
6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்
கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்
ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?
வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions