தெறி லோக்கலாக இறங்கி அடித்திருக்கும் அஜீத்..! வேதாளம் படத்தின் சுவாரசியங்கள்

Bookmark and Share

தெறி லோக்கலாக இறங்கி அடித்திருக்கும் அஜீத்..! வேதாளம் படத்தின் சுவாரசியங்கள்

தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் வேதாளம். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி அன்று விருந்தளிக்க வருகின்றது.

வேதாளம் படம் ஒரு அனுமானுஷ்ய படம் என்று சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. ஆனால் தற்போது வேறு விதமாக பல செய்திகள் வேதாளம் படத்தை பற்றி வந்துகொண்டிருகிறது. இணையத்தில் வெளிவரும் இப்படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.

வேதாளம் படத்தில் அஜித் முதல் முறையாக தர லோக்கலாக இறங்கி அடிக்கிறார் என பிரபல தொலைகாட்சி ஒன்றில் வேதாளம் பட இயக்குனர் கூறியுள்ளார். மேலும், இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கும் எனவும் கூறியுள்ளார். வேதாளம் அனுமானுஷ்ய படம் என இயக்குனர் எந்தவித வார்த்தையும் கூறவில்லை.

இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளது மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.ஒருபுறம் இயக்குனர் இவ்வாறு கூற இணையதளவாசிகள் மற்றொரு பக்கம் வேதாளம் படம் அனுமானுஷ்ய படம் இல்லை இது ஒரு கமெர்சியல் படம் என்றும் இப்படத்தில் அஜித் இரு வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு அஜித்தின் பெயர் தெறி எனவும் செய்திகளை பரப்பி வருகின்றன.

வேதாளம் படத்தின் தலைப்பு நடிகர் லாரஸின் தலைப்பு எனவும், இத்தலைப்பை அஜிதிற்க்காக கொடுக்க ஒப்புகொண்டார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், அஜித் சிவப்பு உடையில் மொட்டையுடன் இருக்கும் காட்சி படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் காட்சி என்கின்றனர்.

இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தீபாவளியன்று நாமும் விருந்தை ருசித்தால் தான் தெரியும்.


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions