வேதாளம் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன..?

Bookmark and Share

வேதாளம் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன..?

தீபாவளி தினமான நவம்பர் 10ம் தேதி வேதாளம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கான ஓபனிங் டாக் வேகமாகப் பரவ மழையால் ஏற்பட்ட தொடர் விடுமுறையும் படத்தின் வசூலை அப்படியே தக்க வைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

இன்றுடன் படம் வெளிவந்து இரண்டாவது வாரம் முடியப் போகிறது. பல இடங்களில் இந்தப் படத்தின் வசூல் எந்திரன் படத்தின் வசூலைத் தொட்டுவிட்டதாக சிலர் பரப்பி வருகிறார்கள்.

இன்றைக்கு ரசிகர்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் இல்லாமல், சில வினியோக நிறுவனங்களும், சில திரையரங்குகளும் கூட சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்கள படத்திற்கான வசூலைப் பற்றி சில புள்ளி விவரங்களை அறிவிக்கிறார்கள். 

அதை அடிப்படையாக வைத்து ரசிகர்களும் அவர்கள் கணக்கிற்கு ஒரு வசூலைக் கணக்கிட்டு அளந்து விடுகிறார்கள். ஒரு பக்கம் சீனியர் வினியோகஸ்தர்கள் படத்தைப் பற்றி ஒரு விவரத்தை அளிக்க, மறுபக்கம் அஜித்தின் ரசிகர்கள் வேறொரு வசூல் விவரத்தை அளிக்க வேதாளம் படத்தின் வசூல் அடிக்கடி முருங்கை மரம் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.

100 கோடி வசூலை படம் கடந்த வாரமே தாண்டி விட்டது என்ற தகவலும் வெளியானது. ஆனால், படத்தை வாங்கிய பெரிய இடத்து வினியோக நிறுவனம் பட வசூல் பற்றி அறிவித்தால் மட்டுமே படத்தின் உண்மை வசூல் என்ன என்று தெரிய வரும். 

அப்படி அவர்கள் அறிவித்தால் மட்டுமே படத்தின் உண்மை விவரம் தெரிய வரும். அதனால் படத்தின் வசூல் என்னவென்று தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஏன் நடித்த அஜித்திற்கே கூடத் தெரியாது என அனுபவ வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் அள்ளிய வசூலை பிரிப்பதில் சிக்கல்!
8 நாளில் 100 கோடி வசூல் அடித்த வேதாளம்!
6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்
கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்
ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?
வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions