வேதாளம் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Bookmark and Share

வேதாளம் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேதாளம் படத்தின் டிரெய்லர், இன்னும் 2 தினங்களில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அஜீத், ஸ்ருதி ஹாசன்,லட்சுமி மேனன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் வேதாளம். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் வேதாளம் படத்தின் டிரெய்லர் இன்னும் 2 தினங்களில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 நிமிடங்கள் 32 நொடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் அநேகமாக புதன்கிழமை நள்ளிரவில் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன. பர்ஸ்ட் லுக் தொடங்கி பாடல்கள் வரை ஒவ்வொன்றையும் வியாழக்கிழமையில் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

எனவே இந்த வாரம் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிடலாம் என்று ரசிகர்கள் டிரெய்லரை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். 45 நொடிகள் ஓடக்கூடிய டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் பல்வேறு சாதனைகளை படைத்த நிலையில் தற்போது டிரெய்லரும் வெளியாகவிருக்கிறது.

குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் வேதாளத்தில் ஆக்ஷனுக்கு குறைவில்லை என்பதும் படத்தில் அஜீத் டுகாட்டி பைக்குகளை ஓட்டியிருப்பதும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

வீரத்தைத் தொடர்ந்து அஜீத்துடன் 2 வது முறையாக சிறுத்தை சிவா இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. டீசரில் தெறிக்க விட்ட அஜீத் டிரெய்லரில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions