வேதாளம் ஸ்டோரி பற்றி இயக்குனர் சிவா சொன்ன முக்கியமான தகவல்கள்

Bookmark and Share

வேதாளம்  ஸ்டோரி பற்றி இயக்குனர் சிவா சொன்ன முக்கியமான தகவல்கள்

தற்போது அஜித் நடித்து வரும் வேதாளம் பேய் படம், டான் வகை படம் என இப்படம் பற்றி பல கதைகள் உலா வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் சிவா பிரபல வார இதழ் ஒன்றில் இப்படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். இயக்குனர் சிவா கூறியதாவது:

வேதாளம் குறித்து பல கதைகள் உலா வருகின்றது. அவை ஏதும் இல்லை. இப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட், அது மட்டும் உறுதியாக சொல்ல முடியும். மேலும் அனிருத் இசை குறித்து அனைவரும் பாராட்டுகிறார்கள்.

அந்த பாராட்டு அனைத்தும் அவரை மட்டுமே சாரும். ஏனெனில் படத்தின் கதை கூறும் போதே துள்ளிக்குதித்தார், அஜித்தின் கதாபாத்திரத்தை விவரிக்கும் போது கைத்தட்டி ஒரு ரசிகனைப் போல் ரசித்தார்.

திரையரங்கில் ஆடியன்ஸ் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை அனிருத் முகத்திலேயே கண்டேன் என கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions