விஐபிகளின் கமெண்ட்டால் மகிழ்ச்சியில் வேதாளம் தயாரிப்பாளர்

Bookmark and Share

விஐபிகளின் கமெண்ட்டால் மகிழ்ச்சியில் வேதாளம் தயாரிப்பாளர்

வேதாளம் படத்தின் டீஸருக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் லைக்குளை வாரி வழங்கிய அஜித் ரசிகர்கள் வேதாளம் டிரைலர்கு அதைவிட அதிக லைக்குகளை அள்ளிக்கொடுக்க காத்துக் கொண்டிருந்தனர். 

அஜித் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் காரணமாக கடந்த புதன்கிழமை (நவம்பர் 4) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்ற நம்பிக்கையில் கண்முழித்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டனர். வியாழக்கிழமை வேதாளம் டிரைலர் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து வேதாளம் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் மௌனமாகவே இருந்து வருகின்றனர். வியாழக்கிழமை சென்ட்டிமெண்ட் கடந்துப் போனநிலையில் எந்த நேரத்திலும் வேதாளம் டிரைலர்  வெளியாகும் என நம்பிக் கொண்டிருந்தனர் அஜித் ரசிகர்கள்.

அவர்களுக்கு பேரதிர்ச்சியைத் தருவதுபோல் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிரைலரை வெளியிடாமலே படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பதே அந்த தகவல். 

நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை அஜித், சிவா, ஏ.எம்.ரத்னம், அனிருத் ஆகியோர் பார்த்துள்ளனர். இது மட்டுமின்றி சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் படத்தை பார்த்துள்ளதாக தெரிகின்றது.

படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவ் கமெண்ட் கொடுக்க, ஏ.எம்.ரத்னம் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம். 


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions