வேதாளம் பின்னணி இதுதான் – இயக்குனர் சிவா விளக்கம்

Bookmark and Share

வேதாளம் பின்னணி இதுதான் – இயக்குனர் சிவா விளக்கம்

வேதாளம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.

படத்திற்கு வேதாளம் என்று தலைப்பு வைத்ததால் ரசிகர்களிடையே ‘இது பேண்டசி படமா, மாயாஜால் படமா, புலி பட வேதாளத்துக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?’ என பல சந்தேகங்கள் எழுந்தது. தற்போது இப்பட இயக்குனர் சிவா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

வீரம் படப்பிடிப்பின் போது அஜித் சார் “அடுத்தும் நாம் சேர்ந்து படம் பண்ணலாம், ஒரு கதை ரெடி பண்ணுங்க”ன்னு சொன்னார். அவருக்கு ஏற்ற மாதிரி தயார் செய்த கதை இது. இந்த கதையை அவரிடம் சொல்லும்போது உங்க கேரக்டர் வேதாளம் மாறி பவர்புல்லா இருக்கும் சார்னு சொன்னேன். அப்புறம் அதை நான் மறந்துட்டேன்.

படத்துக்கு தலைப்பு வைக்க பல யோசனைகள் செய்ய்து கொண்டிருந்தபோது அஜித் சாரே “வேதாளம்னு வச்சிடுங்களே”ன்னு சொன்னார். அந்த தலைப்பையே வைத்து விட்டோம். அந்தக் கால காமிக்ஸ் புத்தகங்களில் வேதாளம், இரும்பு கை மாயாவி போன்ற கேரக்டர்கள் பிரபலம்.

அதில் வேதாளம் கேரக்டர் அஜித் சாரின் கேரக்டரோடு ஒத்துப்போவதால் இந்த டைட்டில். இது அண்ணன், தங்கை பாசக்கதை. அதை அஜித் சார் பாணியில் சொல்கிறோம். லட்சுமி மேனன் பாசக்கார தங்கையாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் போல்ட் அண்ட் பியூட்டி கேர்ளாக வந்து கலக்குகிறார் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions