மீண்டும் ஒரு சாதனை படைத்த அஜித்தின் வேதாளம்!

Bookmark and Share

மீண்டும் ஒரு சாதனை படைத்த அஜித்தின் வேதாளம்!

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர். சிறுத்தை சிவா- அஜித் கூட்டணி இணைந்த இரண்டாவது படம் இது. 

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக, இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த ‘ஆலுமா டோலுமா’ பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

இந்த பாடல் தற்போது புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது, இப்பாடலின் வரிகளை அமைத்து வெளியிடப்பட்ட வீடியோ, தற்போது 1 கோடி பார்வையார்களை கவர்ந்துள்ளது.

ஒரு பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று இந்தளவுக்கு பெரிய அளவில் ஹிட்டாவது தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 

ஏற்கனெவே, இப்படத்தின் டீசர், டிரைலர்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளன. அந்த இடத்தை இந்த பாடலும் பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.


Post your comment





Related News
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் கொண்டாட்டம் தொடங்கியது – மதுரை ரசிகர்கள் ஆராவாரம்!
தெறி, வேதாளம் படங்களின் வசூலை கூற மறுத்த தயாரிப்பாளர்கள்!
வேதாளம் படத்தில் அஜித்துக்காக நடிக்கவில்லை: லட்சுமி மேனன்
வேதாளம் டிரைலருக்காக தவமிருக்கும் ரசிகர்கள்!
வேதாளம் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட் வெளியானது
அஜித்தின் தெறிக்கும் வேதாளம் டீசர் வெளியானது
கவுண்டிங் ஆரம்பித்த வேதாளம் டிசர்!
தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? - வேதாளம் குறித்து வெளிவந்த தகவல்
ரசிகர்கள் அதிகம் விரும்பப்படுவது வேதாளமா? புலியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions