அஜித் எடுத்த திடீர் முடிவு; மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய்

Bookmark and Share

அஜித் எடுத்த திடீர் முடிவு; மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி வரும் அக்டோபர் 1ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் அஜித் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்தின் முதல் பார்வை வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவியது. அதேநாளில் விஜய்யின் புலி படத்தின் 2வது டிரைலரும் வெளியானது. இதனால் டிவிட்டரில் அஜித்-விஜய் ரசிகர்களிடையே கடும் போட்டியே நிலவியது.

இதையடுத்து ‘வேதாளம்’ படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றை அஜித் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள். ‘புலி’ ரிலீஸ் ஆகும் அக்டோபர் 1ம் தேதியன்று, வழக்கம் போல நள்ளிரவு 12 மணிக்கு ‘வேதாளம்’ படத்தின் டீசரை வெளியிடலாமா என ‘வேதாளம்’ குழுவினர் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘புலி’ ரிலீஸ் அன்று ‘வேதாளம்’ டீசரை வெளியிட்டால் அது இன்னும் அதிகமான பேச்சையும், பரபரப்பையும் ஏற்படுத்தும், அதனால் படத்திற்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்கு தான் இந்த முடிவாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions