பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா

Bookmark and Share

பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா

பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் காவியத்தலைவன் என சிறந்த படங்கள் அமைந்தாலும் துரதிஷ்டவசமாக ஓடாமல்போனதால் வேதிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டதால் வேதிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது.இந்நிலையில், காவியத்தலைவன் படத்தில் வேதிகா உடன் இணைந்து நடித்த பிருத்விராஜ், வேதிகாவுக்கு ஒரு பட வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறார்.

இவர்கள் மீண்டும் இணைவது  மலையாளப் படத்தில். பிரபல ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவ் இயக்குநராக அறிமுகமாகும் ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் என்ற படத்தில்தான் வேதிகா - பிருதிவிராஜ் இணைந்து நடிக்கின்றனர்.

சுஜித் வாசுதேவ் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்த சிட்டி ஆஃப் காட், மெமரீஸ் செவன்த் டே ஆகிய மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.ரொமான்ஸ் மற்றும் காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் வெற்றியைப் பொறுத்தே வேதிகா மலையாளத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.


Post your comment





Related News
பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி
பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?
இந்தியன் சுகன்யாவை போல் வேதிகா !
நடிகை வேதிகாவுக்கு பிடித்த இடம் சென்னையில்..
வேதிகா இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மா
பிடிகொடுக்காத வேதிகா!
ஷிவலிங்காவை நம்பும் வேதிகா
மோகன்லாலை சந்தித்த வேதிகா
டைவர்ஸ் ஆன ஹீரோவுடன் நடிக்க வேதிகா மறுப்பு
ரசிகர்களை கவர வேதிகா புது டெக்னிக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions