வேதிகா இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மா

Bookmark and Share

வேதிகா  இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மா

ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக வெறும் டூயட், நாலு லவ் சீன்கள் என வழக்கமான பார்முலாவில் நடிக்கும் எந்த நடிகையும், தங்களுக்குள் உள்ள திறமையை முழுவதும் வெளிப்படுத்தும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது நம்மை பெரிதும் ஆச்சர்யப்படுத்துவார்கள்.

பரதேசி, காவியத்தலைவன் படங்கள் மூலம் அப்படி ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வேதிகா,  இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

சுஜித் வாசுதேவ் இயக்கும் ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் என்ற மலையாள படத்தில் பேங்கில் வேலைபார்க்கும் பெண்ணாகவும் நான்கு வயது பையனுக்கு தாயாகவும் நடிக்கிறார் வேதிகா. இப்படத்தின் ஹீரோவாக பிருத்விராஜ் நடிக்கிறார். காவியத்தலைவன் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் நடிக்கும் படம் இது.

விளம்பர பட உலகின் பின்ன்ணணியில் பின்னப்பட்ட கதையில் பிருத்விராஜ் ஒரு பெயின்ட்டராக, பின்னர் விளம்பரப்பட இயக்குனராக நடிக்கிறார். இவருக்கும் இவரது மனைவியான வேதிகாவுக்கும் அவரவர் வேலைப்பளு காரணமாக ஏற்படும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை மையப்படுத்தி  இப்படத்தின் கதை வருகின்றது.


Post your comment





Related News
பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி
பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?
இந்தியன் சுகன்யாவை போல் வேதிகா !
நடிகை வேதிகாவுக்கு பிடித்த இடம் சென்னையில்..
பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா
பிடிகொடுக்காத வேதிகா!
ஷிவலிங்காவை நம்பும் வேதிகா
மோகன்லாலை சந்தித்த வேதிகா
டைவர்ஸ் ஆன ஹீரோவுடன் நடிக்க வேதிகா மறுப்பு
ரசிகர்களை கவர வேதிகா புது டெக்னிக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions