ஷிவலிங்காவை நம்பும் வேதிகா

Bookmark and Share

ஷிவலிங்காவை நம்பும் வேதிகா

மதராஸி படத்தில் அறிமுகமான மும்பை மாடல் வேதிகாவுக்கு தமிழ் சினிமா பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. பாலாவின் பரதேசியிலும், வசந்தபாலனின் காவியத் தலைவனிலும் நடிப்பை கொட்டிய போதிலும் வாய்ப்புகள் இல்லை. இதனால் கன்னட சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

பி.வாசு கன்னடத்தில் இயக்கிக் கொண்டிருக்கும் ஷிவலிங்காதான் வேதிகாவின் ஒரே நம்பிக்கை. சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் பக்கா த்ரில்லர் கதை. ஆப்த மித்ரா, ஆப்த ரக்ஷகா, அரக்ஷகா என தொடர் ஹிட்டுகளை கன்னடத்தில் பி.வாசு கொடுத்திருப்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

தமிழ் படம் பாணியில் பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வேதிகா கிளாமராகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிசல்ட்டுக்கு பிறகே புதிய படங்களை ஒப்புக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions