ஆரம்பமாகியது வீரசிவாஜி !

Bookmark and Share

ஆரம்பமாகியது வீரசிவாஜி !

இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு சில புதிய படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. வாரத்திற்கு ஐந்து படம் வருவதைப் போல வெளியில் தெரிந்தும், தெரியாமலும் பல புதிய படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாவது நடந்து கொண்டுதானிருக்கிறது. 

ஆனால், இப்போதெல்லாம் படங்களுக்குப் பூஜை போடுவதையும் படப்பிடிப்பு ஆரம்பமாவதையும் கூட ரகசியமாகவே வைத்துக் கொள்கிறார்கள். சிலர் மட்டுமே அது பற்றிய தகவல்களை வெளியிடுகிறார்கள். இன்னும் சிலரோ படப்பிடிப்பையெல்லாம் முடித்து விட்டுத்தான் அது பற்றிய தகவல்களையே சொல்கிறார்கள்.  

சமீப காலமாக இப்படி எந்த விதமான வரை முறைகளும் இல்லாமல் சினிமா அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. இன்று சில புதிய படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

அதில் விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் வீர சிவாஜி படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தின் தொடக்க பூஜை இன்று நடந்தது. இதில் விக்ரம் பிரபு, ஷாமிலி, பிரபு, பிரபுவின் மனைவி மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

மேலும் வெள்ளக்கார துரை படத்திற்குப் பிறகு எழில் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுதேவா தயாரிக்கும் வினோதன் படத்தின் படப்பிடிப்பும் இன்றுதான் ஆரம்பம். இதில் வருண், வேதிகா நடிக்கிறார்கள்.

 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions