வில்லாதி வில்லன் வீரப்பன் படத்துக்கு அரசு போடும் தடை!

Bookmark and Share

வில்லாதி வில்லன் வீரப்பன் படத்துக்கு அரசு போடும் தடை!

ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நினைத்த பலருக்கு மே 19ம் தேதி அதிர்ச்சி நாளாகவே இருந்திருக்கும். இந்த சூடு ஆறுவதற்குள் அடுத்த கொள்ளி கட்டையை எடுத்துக் கொண்டு தமிழகம் நோக்கி பயணித்திருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

இவர் இயக்கத்தில் இந்தியில் வெளியாகவிருக்கு கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் வெளியான படத்தை தற்போது வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்.

இதனால் என்ன என்று யோசிப்பவர்கள். வீரப்பன் கொல்லப்பட்டது தற்போதைய அதிமுக ஆட்சியில் என்பதை நினைவு கூர்ந்து கொள்க, ஆபரேஷன் குக்கூன் என்ற பெயரில் நடந்த இந்த வீரப்பன் வேட்டையைத்தான் படத்தில் கூறியிருக்கிறாராம் இயக்குநர்.
இது தற்போதையை அதிமுக அரசுக்கு சுருக் என்று இருப்பதால் படத்திலிருந்து பல காட்சிகளை நீக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாம்.
படத்தின் கதையானது  கண்ணண் என்ற போலீஸ் உயர் அதிகாரியை சுற்றி நகர்கிறது. கண்ணன் துணிச்சலான போலீஸ்காரர். வீர்ப்பனை பிடிப்பது மட்டுமே அவரது ஒரே இலக்கு.
போரில் எதுவும் தவறில்லை என்பதுபோல் வீரப்பனை பிடிக்க வேண்டும் இலக்கை எட்ட எந்த காரியத்தையும் செய்ய முற்படுகிறார் கண்ணன். படத்தின் ஆரம்ப காட்சியே ஆபரேஷன் 'குக்கூன்' திட்டம் தீட்டப்படுவதை விவரிக்கிறது. 
நிஜத்தில் ஆபரேஷன் 'குக்கூன்' கமாண்டராக இருந்தவர் விஜயகுமார் என்ற போலீஸ் அதிகாரி. அவரது திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டவரே கண்ணன்.  படத்தில் இடம்பெறும் அடுத்தடுத்த காட்சிகள் வீரப்பனுக்கு விரிக்கப்படும் வலை குறித்தே.
முதல் திட்டமாக பிரியா என்ற ஒரு பெண்ணை நியமிக்கிறார் கண்ணன். அவர், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் நெருங்கிய தோழியாக மாறுகிறார்.
பிரியா மூலம் வீரப்பன் மறைவிடத்தை அறிந்து அவரை நெருங்குவதே போலீஸின் திட்டம். அத்திட்டத்தில் போலீஸ் அதிகாரி கண்ணன் வெற்றி பெறுகிறாரா என்பதை படம் விவரிக்கிறது.
படத்தில் வீரப்பனாக சந்தீப் பரத்வாஜ் நடித்துள்ளார். நடிகர்கள் சச்சின் ஜோஷ், உஷா ஜாதவ், லிசா ரே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
'கில்லிங் வீரப்பன்' என்ற பெயரில் இந்தியின் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 'வில்லாதி வில்லன் வீரப்பன்' பெயரில் ஜூன் 3ம் தேதி தமிழில் வெளியாகிறது. 

 

 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions