வேலையில்லா பட்டதாரி படத்தின் பார்ட்-2வில் நடிக்கும் தனுஷ்!

Bookmark and Share

வேலையில்லா பட்டதாரி படத்தின் பார்ட்-2வில் நடிக்கும் தனுஷ்!

தமிழ்சினிமாவில் இன்றைய தேதியில் மிகப்பெரிய பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன்தான். விஷால், தனுஷ் உட்பட பல ஹீரோக்களுக்கும் கூட இவரே பைனான்ஸியர்.

அன்பு தரும் பணத்தில்தான் பெரிய பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுக்கிறார்கள் இவர்கள். வெறும் பைனான்சியராக இருந்த அன்பு ஒரு கட்டத்தில் விநியோகஸ்தராக மாறினார்.

பெரிய பட்ஜெட் படங்களின் மதுரை ஏரியாவை அன்புவைத் தவிர வேறு யாரும் வாங்க முடியாது. அந்தளவுக்கு செல்வாக்கு படைத்த மதுரை அன்பு, கோபுரம் பிலிம்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கி வெள்ளைக்காரத்துரை படத்தை தயாரித்தார்.

படத்தயாரிப்பில் நேரடியாக இறங்கி அவர் முதன் முதலாக தயாரித்த படம் வெள்ளைக்காரத்துரை.  ஏ சென்டரில் பெரிதாக ஓடாத இந்தப்படம் பி அண்ட் சி சென்டரில் செமத்தியாய் கல்லாக்கட்டியது.

எனவே உடனடியாக அடுத்தப் படத்தை ஆரம்பிக்க இருக்கிறார். மதுரை அன்புவின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தின் பார்ட் 2 ஆக உருவாகும் அந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார்.


Post your comment





Related News
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions