வேலைக்காரன் படக்குழுவினரின் நியூ பிளான், குஷியான ரசிகர்கள் - விசியம் என்ன தெரியுமா?

Bookmark and Share

வேலைக்காரன் படக்குழுவினரின் நியூ பிளான், குஷியான ரசிகர்கள் - விசியம் என்ன தெரியுமா?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த படம் வேலைக்காரன், பகத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், சதிஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும் வசூலையும் பெற்று வருகிறது, இதனையடுத்து தற்போது படக்குழுவினர் ரசிகர்கள், பள்ளி மாணவர்கள், மீடியா நண்பர்களுக்காக ஒரு திட்டம் போட்டுள்ளனர்.

அது என்னவென்றால் வேலைக்காரன் படத்திற்காக 8 ஏக்கரில் போடப்பட்ட செட்டை மக்கள் பார்வையிட செய்ய முடிவு செய்துள்ளது, இந்த தகவலை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions