புதுமுகங்கள் நடிக்கும் “ வெள்ள காக்கா மஞ்ச குருவி “

Bookmark and Share

புதுமுகங்கள் நடிக்கும் “ வெள்ள காக்கா மஞ்ச குருவி “

எம்.குப்பன் பெருமையுடம் வழங்க குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “வெள்ள காக்கா மஞ்ச குருவி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கார்த்திக்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது.

கத்தி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அணுகிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல், சேஷீ இவர்களுடன் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.

எழுதி இயக்குபவர் S.K.முரளீதரன். படம் பற்றி இயக்குனர் எஸ்.கே.முரலீதரனிடம் கேட்டோம்... கிராமத்தில் படித்த ஒரு இளைஞன் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு பணக்கார பெண் ஒருவள் மீது காதல் வருகிறது. அதனால் அவனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

பொறுப்பில்லாமல் இருந்த அவன் சமுதாய சம்மந்தப்பட்ட பிரச்னை ஒன்றை கையிலெடுத்து ஜெயிக்கிறான். ஊரே மெச்சுகிறது. அவனது காதல் ஜெயித்ததா? என்பதை கமர்ஷியலாக உருவாக்கியுள்ளோம் என்றார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொன்ன திருப்தி இருக்கு என்றார்.

படப்பிடிப்பு சென்னை, அரக்கோணம், சோளிங்கர், ஊட்டி, திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.


Post your comment





Related News
பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
குருவி தோல்வி படம்னு யார் சொன்னா? உண்மையை உடைத்த பிரபலம்!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
பிரமாண்ட இயக்குநர் சொல்லியும் கூட பீட்டாவை விட்டு விலகாத 'வெள்ளச்சி'!
சசிகுமார் படத்துக்கு இந்த கதியா? புலம்பும் தியேட்டர்காரர்கள்!
அஷ்வின் கக்கமனு நடித்திருக்கும் ‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்
குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’
சசிகுமாரின் புதிய படம் பலே வெள்ளையத் தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions