பொண்டாட்டி தாலியை விற்று படம் எடுத்தேன்: இயக்குனர் உருக்கம்

Bookmark and Share

பொண்டாட்டி தாலியை விற்று படம் எடுத்தேன்: இயக்குனர் உருக்கம்

குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் சார்பில் எம்.குப்பனும், பாஸ் மணிவண்ணனும் இணைந்து தயாரித்திருக்கிற படம் வெள்ள காக்க மஞ்ச குருவி. கார்த்திக்தாஸ். அணு கிருஷ்ணா என்ற புதுமுகங்களுடன் மீரா கிருஷ்ணா, சக்திவேல், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள்.

ஜி.சாய்தர்ஷன் என்ற புதுமுகம் இசை அமைத்திருக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில்  இயக்குனர் எஸ்.கே.முரளிதரன் உருக்கமாக பேசியதாவது: சின்ன வயசுலேருந்தே சினிமான்னா உசிரு.

எப்படியாச்சும் ஒரு படம் டைரக்டர் பண்ணிடலாமுன்னு லட்சியத்தோட இருந்தேன். சென்னை வந்து அசிஸ்டெண்ட் டைரக்டரா பல பேருகிட்ட  சேருவதற்கு ட்ரை பண்ணினேன்.

யாரும் சேர்த்துக்கல. அதுக்காக வந்த லட்சியத்தை விட்டுவிட முடியுமா. ஷங்கர் சார், முருதாஸ் சார், பேரரசு சார் ஷூட்டிங் எங்க நடந்தாலும் போயிடுவேன். தூரத்துலேருந்து அவுங்க எப்படி டைரக்ட் பண்றாங்கன்னு கவனிச்சு பார்ப்பேன்.

இப்படி பல வருஷம் ஃபாலோ பண்ணி படம் டைரக்ட் செய்ய கத்துகிட்டேன்.வெள்ள காக்கா மஞ்ச குருவி கதை தயார் பண்ணிட்டு நிறைபேரை பார்த்தேன். யாருமே சான்ஸ் தரலை நானே தயாரிக்க முடிவு பண்ணிட்டேன். பூஜை போட்டேன்.

ஒரு காமெடி நடிகரின் வாரிசு நடிக்கிறதா இருந்திச்சு. திடீர்னு அவர் மகனுக்கு வேறு பெரிய டைரக்டர் கிடைச்சதும் அங்கு போயிட்டார். அதற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை ஆரம்பிச்சேன்.

டைரக்ஷன் கத்துக்கிட்டவன் தயாரிப்பு கத்துக்கல. எல்லாத்தையும் வித்து படம் எடுத்தேன். கடைசியில் மனைவி தாலியை வித்தேன் (கண்கலங்குகிறார்). அப்படியும் படம் முடியலை அடுத்து என்ன செய்யலாமுன்னு தவிச்சிட்டிருந்தப்போதான் இந்த தயாரிப்பாளர்கள் எனக்கு கிடைச்சாங்க. படத்தை முடிச்சிட்டேன். இனி முடிவு ரசிகர்களோட கையில். என்றார்.


Post your comment





Related News
பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
குருவி தோல்வி படம்னு யார் சொன்னா? உண்மையை உடைத்த பிரபலம்!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
பிரமாண்ட இயக்குநர் சொல்லியும் கூட பீட்டாவை விட்டு விலகாத 'வெள்ளச்சி'!
சசிகுமார் படத்துக்கு இந்த கதியா? புலம்பும் தியேட்டர்காரர்கள்!
அஷ்வின் கக்கமனு நடித்திருக்கும் ‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்
குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’
சசிகுமாரின் புதிய படம் பலே வெள்ளையத் தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions